Thursday, February 28, 2008

◌ வலியறிதல்

தார்ச்சாலையின் காதல்நான்
இருளின் நிறத்தில் கரைந்துநிற்கும்
அதன் யெளவனம்
என்னைக் கிளர்வூட்டுகிறது
பிசிறுநீக்கிய ஓவியத்தின் நளினமென
அடர்மரங்களோடு நெளிந்துசெல்லும்
அதன் உயிரோட்டம்
என் பருவங்களை உடைக்கிறது
தன்னை நகர்த்தாமல் என்னை நகர்த்தும்
மாயத்தோற்றம்
கண்களைக் கூசப்பண்ணுகிறது
அருகமைந்த அறைக்குள்ளிலிருந்து
ரசித்துக் கொண்டிருக்கிறேன்
குளிர்ந்த மழையில்
அது வெற்றுடம்போடு குளிப்பதை
வெப்பத்தில் உடலுலர்த்திக் கொள்வதை
உயிர்களை விழுங்குகையில்
ஆண்வாசனை வீசுமதன்
நடுக்கமுற்ற மார்பில் முத்தமிடுகிறேன்
அளவுகூடிய மின்கசிவாய்
என் உதடுகளில் பரவுகிறது
தார்ச்சாலையின் ஊமைவலி.

2 comments:

www.bogy.in said...

தமிழர்கள் அனைவருக்கும் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

இந்த ஆண்டு உங்கள் வாழ்வில் எல்லையில்லா மகிழ்ச்சியும், நோயற்ற வாழ்வும், குறைவற்ற செல்வமும், நீண்ட ஆயுளும் மற்றும் அனைத்து நலங்களும், வளங்களும் பெற்று வாழ வாழ்த்துகிறோம்.

அன்புடன்
www.bogy.in

அனைவருக்கும் அன்பு  said...

உங்களில் வரிகளில் தேங்கி நிற்கும் வலிகள் என்னை கூர்மையாக குத்துகிறது ..............வார்த்தைளில் வாள் சொருகும் விதம் ரசனைக்குரியது ஆய்வுக்குரியது ........தொடர்ந்து எழுதுங்கள் தோழி என்னுடைய தளம் நேரம் இருப்பின் பாருங்கள்

பெண் என்னும் புதுமைkovaimusaraladevi.blogspot.com