இரகசியங்கள்அதி அற்புதமானவை.
முத்தத்தின் கசந்த போதையோடு
எப்போதும் என்னிடம்

சேர்ந்துகொண்டே இருக்கின்றன
நிபந்தனைகள் ஏதுமின்றி
எல்லா இரகசியங்களையும்
எல்லோரிடமும் சொல்லிவிடுகிறேன்
உடலினையும் தருணத்திலரும்பியும்
நீலவியர்வையாய்
ஒளிர ஆரம்பிக்கின்றன அவை.
வலியைச் சுழன்றடிக்கும்
மாதத்தின் இரத்தநாட்களைப் போல்
மீண்டும் சில இரகசியங்கள்
மேலெடாய் படிகின்றன.
என் வண்டல் சமவெளியில்.
உடனுக்குடன் அப்புறப்படுத்தப் படுமவை
தேமலின் சிவந்த நிறத்தோடு
வெளியேங்கும் சுற்றித் திரிகின்றன
இரகசியங்களெனும் பிரக்ஞையற்று.
ஆனாலும்
விரிசலுற்ற மனத்தாழிக்குள்
ஒளிந்து கிடக்கின்றன
ஓராயிரம் சுயரகசிங்கள்.
9 comments:
சொல்லிலும் சொல்லியும் தீராதவையே
சுய ரகசியங்கள்.
ரகசியங்கள்
தொடரும்...
சொன்ன பிறகும்
பின்னிற்கும்
சுய ரகசியங்கள்!
ரகசியங்கள் ரகசியமானது.
நெல்லிக்காய் நினைவுகள் போல நீர்படுகிற நேரமெல்லாம் இனிக்கும்.
நெல்லிக்காய் நினைவுகள் போல நீர்படுகிற நேரமெல்லாம் இனிக்கும்.
///////
உண்மைதான் இனிக்கும் !!!!!
உங்கள் கவிதைகள் சிறப்பாக உள்ளன.
welcome to your poems,i appreciate much.
P.Sampath
coimbatore
ardsds@gmail.com
I appreciate your writings much.
p.sampath
coimbatore
ardsds@gmail.com
You are really a puratchi and pudumai Ezhuthualar.
N.Devendiran
Lalapet
You are really a puratchi & pudumai Ezhuthalar.
Post a Comment